மாலிக்கபூரின் மதுரை மீனாட்சி கோவில் படையெடுப்பு!

  download

prt_295x208_1386385781   மதுரைக்கு வந்து கொண்டிருந்தான் கொடுங்கோலன் மாலிக்கபூர். அவன் வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல்.நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் விக்கிரக மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியது தான் படையெடுப்பு.* இவன் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.* சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப் போலவே நகை, விளக்கு,மாலை, எல்லாம் ஏற்பாடுசெய்தார்கள்.* மதுரை வந்தான் மாலிக்கபூர்.ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். போலி விக்ரகத்தை உண்மையென்று நினைத்து இடித்தான்.செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போனான்.* அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.* அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் மறுசீரமைப்பு செய்தார்கள். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.* அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்கிரகமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள்! இதோ இடித்து விட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்கிரகமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லி விட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று மகிழ்ச்சியுடனும் அழுதுகொண்டே சொன்னார்.உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......--- உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! * 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புதுபொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.* இன்றும் மதுரை மீனாட்சி கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விவரம் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரை கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதி போடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார். ஓம் நமசிவாய போற்றி...

Achievements

 • 1970-Designed a new model telephone instrument.
 • 1973- Registered MAK controls.
 • First project-Designing of ring frame machine.
 • 1976-Presented the Design of ASU.
 • 1992-Brought GPU into national focus.
 • Kerala government contacted to make indigenous aerobridges.
 • American aviation consultants tied up to induct MAK technologies to US

Highlights

 • 1990 - Rotary Club of Coimbatore (Metropolis) - Vocational Excellence Award.
 • 1995 - SIATI-Award for Excellence in Aerospace.
 • 2003 - Ernst & Young - Entrepreneur of the Year Nominee.
 • 2013-CMA-Mahendra - Best SME Entrepreneur Award.